வெலிவேரிய - பெலும்மஹர முதுன்கொட பிரதேசத்தில் இரு பஸ்களுக்கு இடையில் நசுங்குண்டு ஒருவர் உயிரழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸை அதன் சாரதி பின்னோக்கி இயக்கியபோது பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸிற்கு முன்னால் நின்ற நபர் இரு பஸ்களுக்கும் இடையில் நசுங்குண்டு உயிரிழந்துள்ளார். பதுளை - பொரகஹலந்த பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார். சம்பவத்தை அடுத்து பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று கம்பஹா நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
0 Comments