முறுகல் நிலையொன்று ஏற்பட்டுள்ளதுடன் கர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது .
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ….
இப் பகுதியில் இரவு வேளைகளில் இடம்பெறும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் முகமாக விழிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றது .
இதனால் இரவு வேளைகளில் வெளியில் செல்பவர்கள் தங்களது ஆள் அடையாளங்களை உறுதிப்படுத்தும் முகமாக ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும் என அக்குழுவால் தீர்மானிக்கப்பட்டது .
இந்நிலையில் விசேட அதிரடி படையினர் அணியும் ஆடைகளை ஒத்த ஆடைகளை அணிந்து நிந்தாவூர் பகுதிக்கு வந்த 4 அல்லது 5 பேர் அடங்கிய குழுவினர் கடற்கரையில் வைத்து ஆடைகளை மாற்றி விட்டு ஊருக்குள் வருவதை கண்ட மக்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டுள்ளனர் .
உடனே சுதாகரித்துக் கொண்ட அக்குழுவினர் மக்களை தாக்கி விட்டு தப்பியோட எத்தனித்துள்ளனர் . உடனே அரசியல் வாதிகளும் அவ்விடத்திற்கு விரைந்து வந்துள்ளனர் .
உடனே அங்கு வந்த விசேட அதிரடி படையினர் மீட்டுக்கொண்டு போக முயன்ற வேளையில் மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அதிரடிப்படையினர் வானத்தையும் பூமியையும் நோக்கி சுட்டுள்ளனர் இதிலிருந்து பறந்த சன்னங்கள் மூலமாக இரண்டொரு மக்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது .
நிந்தாவூர் பிரதேச சபை தவிசாளர் ஏ . எம் தாகீர் கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் . இதன் காரணமாகவே அங்கு பதற்ற நிலை காணப்படுகின்றது .
தம்மால் பிடிக்கப்படவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும் விசேட அதிரடி படையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் டயர்களை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதனால் வர்த்தக நிலையங்கள் , பாடசாலைகள் , வங்கிகள் மூடப்பட்டு இயல்வு நிலை பாதிக்கப்பட்டது .
இதே வேளை சிவிலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடி படையினர் மீது இனம் தெரியாதோர் மேற் கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர் .
0 Comments