இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகளை எதிர்வரும் 15 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்கனவே உரிய புள்ளிப் பட்டியல்கள் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதற்கமைய அவர்களின் அனுமதி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்
வெட்டுப் புள்ளிகள் வெளியானதும் இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
புலமைப்பரிசில் பரீ்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அடுத்த வருடத்தின் முதலாம் தவணையின்போது பாடசாலைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
0 Comments