கடந்த இரண்டு வருடங்களாக கல்முனை மாநகர சபையில் கையொப்பமிடாமல் திருட்டுத்தனமாக சம்பளம் பெற்று வந்த இருவரை கணக்காய்வு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;
கல்முனை மாநகர சபை மற்றும் பிரதேச செயலகங்களில் கணக்காய்வு திணைக்கள அதிகாரிகள் கணக்காய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது கல்முனை மாநகர சபையில் கடமை செய்யாத இருவர் கடமை செய்ததாக காண்பித்து சம்பளம் பெற்று வந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருதை சேர்ந்த ஒருவரும் மருதமுனையை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு மோசடியாக சம்பளம் பெற்று வந்துள்ளனர்.
வரவு இடாப்பில் பெயர் இல்லாத நிலையில் கொடுப்பனவு உறுதி சீட்டில் ஒப்பமிடப்பட்டு- கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக கணக்காய்வு அதிகாரிகள் ஆவணங்கள் எடுத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
0 Comments