Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கடத்தப்பட்ட எங்கள் பிள்ளைகள் எங்கே? - கார்த்திகை தீப தீருநாளில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

கடத்தப்பட்ட எங்கள் பிள்ளைகள் எங்கே, கொலைகார பூமியில் கொமன்வெல்த் மாநாடா, சர்வதேச விசாரணை தேவை , காணாமல் போனவர்கள் தொடர்பில் பதில்சொல், , எங்கள் வீடுகளை எம்மிடம் தா, வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு" என பல கோசங்களை எழுப்பி காணாமல் போன உறவுகளால் தீப்பந்தம் ஏந்திய ஆர்ப்பாட்டம் ஒன்று வவுனியாவில் இன்று மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் காணாமல் போனோரை தேடும் உறவுகளின் சங்கம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த தீப்பந்த போராட்டம் வவுனியா கந்தசாமி கோவிலில் பகுதியில் இடம்பெற்றது. கார்த்திகை தீப தீருநாளான இன்று மேற்கொள்ளப்பட்ட இத் தீப்பந்தம் ஏந்திய போராட்டத்தில் காணாமல் போனேரின் உறவுகள், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments