இலங்கைக்கு எதிரான மேற்கொள்ளப்படவுள்ள அழுத்தங்களுக்கு ஒரு போதும் அடிபணியப் போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட உள்ளதாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
|
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியா கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறியக் கூடாது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகள் திருப்தி அளிக்கின்றது.
எனவே சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. இலங்கை தொடர்பில் குரல் கொடுக்கும் தரப்பினர் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்காது இரண்டு பக்கத்தையும் பார்க்க வேண்டும் எனினும் அரசாங்கம் எதனையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை.எவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கும் விளக்கம் அளிக்கத் தயாராக உள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
|
0 Comments