Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிலிப்பைன்ஸில் பாரிய சூறாவளி

பிலிப்பைன்ஸை தாக்கிய ஹையன் சூறாவளியினால் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளன.
பிலிப்பைன்சின் மத்திய பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 235 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியதாகவும் ,  இதனைடுத்து மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் ,  வாகன போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பல பகுதிகளை ஹையன் சூறாவளி தாக்ககூடும் என்ற அச்சத்தில் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்த ஆண்டில ஏற்பட்ட சூறாவளியில் இந்த ஹேயன் சூறாவளியானது மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளி என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதத்தில் ஏற்பட்ட நில அதிர்வை அடுத்து  அதிலிருந்து மீண்டு வரும் நிலையில் இன்று ஹேயன் சூறாவளி தாக்கியுள்ளது.

Post a Comment

0 Comments