பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களினால் இன்று தாக்கப்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற மனித உரிமை தொடர்பான நிகழ்வுக்கு எதிராக ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனா அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஞானசார தேரர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்குள் பிரவேசித்து நிகழ்வை குழப்ப முயற்சித்தார். இதனையடுத்து அங்கு மோதல் நிலைமை உருவாகியது. 2002 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற சமாதான பேரணி ஒன்றில் புகுந்து நாசவேலை செய்ய முயற்சித்த பொழுதும் ஞானசார தேரர் தாக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
|
![]() ![]() |
0 Comments