Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொக்கட்டிச்சோலைதிருத்தான்தோறீஸ்வரர் ஆலயகல்விப்பணி

கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரர் அலய கல்விப் பணி மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரர் ஆலய தேசமகா சபைத் தீர்மானத்திற்கிணங்க வருடாந்த வருமானத்தில் பத்து வீதம் குறிப்பாக பத்து இலட்சம் ரூபா வரை கல்வி அபிவிருத்திக்காக செலவு செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்குகள் நடாத்தப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட பட்டிப்பளை வவுணதீவு மற்றும் ஏறாவூர் பற்று கல்விக் கோட்டங்களில் உள்ள சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கே இக் கருத்தரங்கு நடாத்தப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே பட்டிப்பளை ;பபிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வவுணதீவுப் பிரதேசத்தில் கன்னன்குடா மகாவித்தியாலயத்தில் நேற்று ஆரம்பித்ததுடன் இன்று நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரர் ஆலய அனுசரணையுடன் மண்முனை மேற்கு கல்வி அபிவிருத்திக் கழகத்தினால் மண்முனை மேற்கு மற்றும் ஏறாவூர் பற்றுக் கோட்டங்களில் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே இன்று நாவற்காட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மண்முனை மேற்கு கல்வி அபிவிருத்திக் கழகத்தின் தலைவர் வ.ஜெயக்காந்தன் தலைமையில் இடம்பெற்ற இவ் ஆரம்ப நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் வெ.தவராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய நிருவாகத்துக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞா.ஸ்ரீநேசன் சிறப்பு விருந்தினராகவும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.கணேசு, எஸ்.முருகேசப்பிள்ளை மற்றும் திருத்தான்தோறீஸ்வரர் ஆலய வண்ணக்கரும் பொருளாளருமாகிய பா.சபாரெத்தினம்,வண்ணக்கரும் செயலாளருமாகிய இ.சாந்தலிங்கம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்டதுடன் அழைப்பு அதிதிகளாக பிரதேச பாடசாலை அதிபர்கள் ஆலயங்களின் தலைவர்கள் சமூக அமைப்புக்களின் தலைவர்கள் அழைப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.


Post a Comment

0 Comments