மட்டக்களப்பு- கொழும்பு பிரதான வீதியில் புணானைக் காட்டுப் பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இனந்தெரியாத ஒருவரது சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.புணானை மயிலந்தன்னைக் காட்டுப்பகுதியில் மாடு தேடிச் சென்ற இளைஞர், மரத்தில் தொங்கிய நிலையில் ஒருவரது சடலத்தைக் கண்டு வாழைச்சேனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர், கொலை செய்து தூக்கிலிடப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்று மரண மருத்துவ பரிசோதனை முடிவடைந்ததன் பின்னர்தான் தெரிவிக்க முடியும் என்று வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் கடந்த ஒருவாரத்திற்குள் நடைபெற்று இருக்கலாம் என்றும் இன்னும் அடையாளம் காணப்படவில்லையென்றும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
0 Comments