பிலிப்பைன்ஸ்சில் சூறாவழயானது பல அனர்த்தங்களை விழைவித்த பின்பு, விசாவிற்கு விண்ணப்பித்த விண்ணப்பங்களைப் பரிசீலப்பதை துரிதப்படுத்தவுள்ளதாகத் தெரியவருகிறது. இவ்வாறு விண்ணப்பப் பரிசீலலைனயைத் துரிதப்படுத்துவதன் மூலமாக பல பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் மக்களுக்கு உதவியளிக்க முடியும் எனக் கனடிய அரசு கருதவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கிழமை கனடிய அரசு பிலிப்பைன் நாட்டுமக்காளால் விசாவிற்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்த விண்ணப்பங்களைத் தூதரக அதிகாரிகள் பரிசீலனை செய்வதைத் துரிதப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருந்தது. அத்துடன் அந்நாட்டில் அவர்களது பயண ஆவணங்கள் தொலைக்கப்பட்டிருந்தால் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குடியுரிமை, குடிவரவுத் துறை அமைச்சாரன கிறிஸ் அலெக்சாண்டர் அவர்கள் தனது கேள்வி நேரத்தின்போது தாம் ஏற்கனவே தாம் விண்ணப்பத்தில் அதிகளவு பரிசீலனையை முடிவு செய்துவிட்டோம் எனவும் ஆனால் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் குறிப்பிட்ட அமைச்சர் உரையாற்றும்போது இவ்வாறு வாழ்வாதாரங்களை யும், உறவினர்களையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு நாம் அவர்களை கனடாவிற்கு வருவதற்கு அனுமதியளிப்பதன் மூலமாக அந்த சமூகத்திற்கு உதவி வழங்குகின்றோம் எனவும் தெரிவித்திருக்கின்றார்.
கனடாவில் அகதிகளுக்கு உதவும் முகமாக தனிப்பட்ட முறையிலும் அரச சார்பானதாகவும் பல நிறுவனங்கள் அகதிகளுக்கு மானிதாபிமான உதவிகளை செய்துவருகின்றர்கள்.
அதுமட்டுமல்ல அலெக்சாண்டர் தான் கனடியர்கள் தாமாகவே முன்வந்து குழந்தைகளில் பெற்றோரையிழந்த குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் கனடியத் துருப்புக்கள் ஏற்கனவே பிலிப்பைன்சில் தண்ணீரைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள் என்றும் கிட்டத்தட்ட 200 துருப்புக்கள் அங்கு சென்றிருக்கின்றன என்றும் தெரிவித்திருக்கின்றார்.
0 Comments