இலங்கையில் குற்றச்செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது. பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். உலக அளவிலும், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளிலும் இலங்கையிலும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
|
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் படையினர் கைதிகள் மீது துன்புறுத்தல்கள் மேற்கொண்டு வருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல், நிலக்கண்ணி வெடிகள் அகற்றல், மாகாணசபை தேர்தல் நடாத்தல் உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் குற்றச்செயல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தில் கணவரை இழந்த 90, 000 பெண்கள் வடக்கில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
|
0 Comments