காதல் தோல்வியால் ரயிலின் முன் பாய்ந்து இளைஞன் தற்கொலை மட்டக்களப்பில் சம்பவம்
காதல் தோல்வியால் கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலின் முன் பாய்ந்து இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மட்டக்களப்பில் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. இவ்விளைஞன் மட்டக்களப்பு மாமாங்கத்தைச் சேர்ந்த விஜி சிரான். வயது 20 என அறியப்படுகின்றது. இச்சம்பவம் இனறு அதிகாலை4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காதலில் தோல்வியடைந்ததினாலேயே இவ்விளைஞன் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments