Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

செக்ஸ் தொல்லை; தற்கொலை; இளம்பெண்ணின் சோகக் கதை

செக்ஸ் தொல்லை; தற்கொலை; இளம்பெண்ணின் சோகக் கதை


வேலூர் மாவட்டம் மாமண்டூரில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணிற்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஓச்சேரி அடுத்த மாமண்டூர் காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 37). இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். இவரது மனைவி மகாலட்சுமி 3 ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாததால் இறந்துவிட்டார்.
கார்த்திகேயன் சென்னை கரையான் சாவடி டாஸ்மாக் கடை பாரில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு கலைவாணி (வயது27) என்பவரும் வேலை செய்து வந்தார். கலைவாணி, கணவனை பிரிந்து தனிமையில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கார்த்திகேயனுக்கும் கலைவாணிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தாய் இல்லாமல் இருக்கும் தனது இரண்டு மகளை வளர்ப்பதற்காக, கலைவாணியை ஓராண்டுக்கு முன் கோவிலில் தாலி கட்டி மனைவியாக்கி கொண்டார். பின்னர் கார்த்திகேயன், கலைவாணி மற்றும் குழந்தைகளுடன் மாமண்டூரில் வசித்து வந்தார்.
பணகஷ்டம் ஏற்பட்டதால் கார்த்திகேயன் மீண்டும் சென்னையில் உள்ள பாரில் வேலைக்கு சேர்ந்தார். வாரம் ஒருமுறை மாமண்டூர் வந்து கலைவாணி மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு சென்று வந்தார்.
இந்நிலையில் கார்த்திகேயன் வீடு அருகில் வசிக்கும் ஜக்கு (எ) சந்திரன் (வயது 33), சுந்தரம் (38) ஆகிய இருவரும் தங்களது ஆசைக்கு இணங்குமாறு கலைவாணியை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து கலைவாணி கார்த்திகேயனிடம் கூறி உள்ளார். இதையடுத்து ஜக்கு, சுந்தரத்தை கார்த்திகேயன் கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த 25-ந் தேதி மீண்டும் கலைவாணியை ஜக்கு, சுந்தரம் இருவரும் தங்களது ஆசைக்கு இணங்க வற்புறுத்தினர். அவர்களுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த உமா (வயது 30) என்பவர் கலைவாணியை ஆபாசமாக பேசியுள்ளார்.
இதனால் மனம் வெறுத்துப்போன கலைவாணி, வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
பலத்த காயம் அடைந்த கலைவாணியை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கலைவாணி நேற்று இறந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் (பொறுப்பு), சப்- இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக ஜக்கு (எ) சந்திரன், சுந்தரம், உமா ஆகியோரை கைது செய்தனர்.

Post a Comment

0 Comments