2 வயது குழந்தையின் வயிற்றில் மற்றொரு குழந்தை (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
சீனாவில் வயிறு வீங்கிய நிலையில் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தையின் வயிற்றில் மற்றொரு குழந்தை இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சீனாவின் ஹோக்சி பகுதியை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை கிஸயோ பெங். இக்குழந்தை கடந்த சில நாட்களாக மூச்சு திணறல், உடல் நல பதிப்பு போன்றவற்றால் அவதிப்பட்டுவந்தான்.
இந்நிலையில் இக்குழந்தையின் வயிறு பெரிதாக துவங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பெங்கை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கான் செய்து பார்த்தபோது, குழந்தையின் வயிற்றில் சுமார் 20 செ.மீ. அளவிலான ஆண் குழந்தை இருந்தது தெரியவந்தது. இந்த சிசுவிற்கு முதுகெலும்பு, கால்கள், பாதங்கள், விரல்கள் ஆகியவை நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது.
பெங்கின் வயிற்றுக்குள் இருந்த இக்குழந்தை, அவனுடைய ‘பாரசிட்டிக் ட்வின்’ என அழைக்கபடவேண்டும். தாயின் வயிற்றில் உருவான இந்த சிசுக்களில் ஒன்று மட்டும் முழுமையாக வளர்ச்சி அடைந்த நிலையில்(பெங்) , மற்றொரு சிசு, அதனுடைய டிவின்னை சார்ந்து வளருமாம்.
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், பெங்கின் வயிற்றில் இருந்து அவனுடைய ‘பாரசிட்டிக் டிவின்னை’ பிரித்தெடுத்த மருத்துவர்கள் அவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவருகின்றனர் .
0 Comments