இலங்கை மீதான தவறான வெளி அழுத்தங்கள் பயனுள்ளதாக இருக்காது.ஜீ.எல்.பீரிஸ்.
இலங்கை மீதான தவறான வெளி அழுத்தங்கள் பயனுள்ளதாக இருக்காது எனவும் அது உள்நாட்டில்
தேவையற்ற விளைவுகளை தூண்டலாம் எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ . எல் . பீரிஸ் ஐக்கிய நாடுகளில் தெரிவித்துள்ளார் .
இலங்கையின் சிக்கல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நுணுக்கங்களை சரியாக புரிந்து கொண்டு நாட்டுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய நாடுகள் தயாராக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார் .
அதேவேளை வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்காளர்களுக்கான தமது கடமைகளை செய்ய வேண்டும் .
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் துரதிஷ்டவசமான சில அரசியல் பிரச்சினைகள் தோற்றுவித்துள்ளது . கட்டுப்பாட்டுடன் நல்லிணக்க செயற்பாடுகளை முன்நோக்கி நகர்த்தி செல்ல வேண்டிய தேவை உள்ளது .
புதிதாக தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபையுடன் இணைந்து பணியாற்றவும் அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் தற்போது முழுமையாக தயாராகியுள்ளது .
போர் நடைபெற்ற பிரதேசத்தில் வழமை நிலையை கொண்டு வர அரசாங்கம் பல சிரமங்களை எதிர்நோக்கியது . நான்கு வருடம் என்ற குறுகிய காலத்தில் அரசாங்கம் பல சவால்களை எதிர்கொண்டது . சிலவற்றை மேற்கொள்ள நீண்டகாலம் தேவைப்படுகிறது .
விரிவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன . இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றப்பட்டனர் . முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு , தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டன . மும்மொழி கொள்கை அமுல்படுத்தப்பட்டது . சுகாதாரம் மற்றும் கல்வித்துறையில் முன்னேற்றங்கள் போன்ற பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன .
சிக்கலான காணி உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன . வேறு எந்த நாடும் இப்படியான குறுகிய காலத்தில் இந்தளவான முன்னேற்றங்களை கொண்டிருக்கவில்லை . இதனால் இலங்கை ஐக்கிய நாடுகளிடம் இருந்து உணர்வு ரீதியான பெரிய நோக்கத்தை எதிர்பார்க்கின்றது .
புலம்பெயர்ந்தவர்களின் செல்வாக்குகள் காரணமாக சர்வதேச சமூகத்தின் சில உறுப்பினர்கள் கொடுத்து வரும் அழுத்தஙகள் வருத்தத்தை ஏற்படுத்துகிறது .
சீரான நிலைத்தன்மையும் தரத்தையும் பயன்படுத்த முக்கியதுவத்தை வழங்க வேண்டும் . தெரிவு செய்த அளவுகோலை கொண்டு செயற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் பீரிஸ் வலியுறுத்தியுள்ளார் .
0 Comments