Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சென்னை இளைஞன் கொலை: இலங்கையர் நால்வர் கைது

சென்னை இளைஞன் கொலை: இலங்கையர் நால்வர் கைது


எஸ்ட்டின் பட்டியில் கொலைசெய்யப்பட்டு சடலம் கிணற்றில் போடப்பட்டிருந்தவரின் அடையாளம் தெரியாமல் எட்டு மாதங்களாக தின்டாடிக்கொண்டிருந்த பொலிஸார் கொலை செய்யப்பட்டவரின் அடையாளத்தை கண்டுபிடித்ததுடன் கொலை செய்தவர்கள் என சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர்.
கொல்லப்பட்டவர் பெரம்பலூரை சேர்ந்த பிரேம் ஆனந்த் (26) என்பவராவர். இவர் சூளைமேட்டில் வேலை செய்துவந்தார். காணாமல் போனவரின் நண்பரிடமிருந்து சென்னை பொலிஸார் முக்கிய தகவலை பெற்றனர். காணாமல் போனவர் தன் நண்பரிடம் ஒரு தொலைபேசி எண்ணை கொடுத்திருந்தார்.
விசாரனையில் இந்த தொலைபேசி எண்ணுக்குரிய ஸ்ரீபன் கொலை செய்தவர்களை காட்டியுள்ளார்.
ஸ்ரீபனின் மனைவியுடன் பிரேம் ஆனந்த் நட்பாக இருந்துள்ளனர் இவர்கள் நட்பு பேஸ்புக் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்ந்தது பிரேம் ஆனந்த் ஸ்ரீபனின் மனைவியை காணவந்த போது இப்பெண்ணின் சகோதரரான ராஜ்குமார் என்பவரும் ஸ்ரீபனும் இந்த பெண்ணுடன் நட்பை தொடரவேண்டாமென எச்சரித்தனர்.
ஆயினும் பிரேம் ஆனந்த் இந்த எச்சரிக்கையைப்பற்றி அக்கறைப்படவில்லை.
இதனால் ஆத்திரம் கொண்ட இவர்கள் பிரேம் ஆனந்தை தந்திரமாக மதுரைக்கு வரச்செய்து அடித்துக் கொன்று உடலை கிணற்றில் போட்டுள்ளனர். இந்த கொலைக்கு மகோந்திரன், துரை ஆகிய இருவரும் உடந்தையாக  இருந்தனர்.
கொலையோடு தொடர்புள்ள நால்வரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வாழ்ந்தவர்கள்.

Post a Comment

0 Comments