முதலமைச்சர் விக்னேஸ்வரின் முறையற்ற நியமனங்கள் சிறீலங்கா அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் செயற்பாடு
வடமாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸவரன் இரண்டு இணைப்பு செயலாளர்களை நியமித்துள்ளார்.
அந்த நியமனம் தொடர்பில் தமிழத் தேசிய கூட்டமைப்பின் அங்கத்து கட்சிகளிடையே முரண்பாடுகளும் சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபராக இருந்த மன்மதராஜா, மற்றும் அரசசார்ப்பற்ற நிறுவனங்களில் பணியாற்றியவரும் சிறிது காலம் சேர்ந்து செயற்பட்டு பின்னர் விலகியவருமான நிமலன் காத்திகேயன் ஆகியோர் இணைப்பு செலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகின்றது.
தமிழத் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் அலோசணைகள் இன்றி கூட்டமைப்பின் தலைமையும், மாகாணசபையின் தலமையும் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ள கூட்டமைப்பு வட்டாரங்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில் வடமாகாண சபை செயற்பட் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
இவ்வாறான முறையற்ற நியமனங்கள் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் நிலைமையை தோற்றுவித்துவிடும் என்றும் கூட்டமைப்பு வட்டாரங்கள் கூட்டிக்காட்டியுள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
ஆரம்பத்தில் இருந்தே முரண்பாடுகளை தவிர்க்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மன்மதராஜா இரத்மலானை இந்து கல்லூரியில் அதிபராக இருந்தபோது கடும் விமர்சனங்களுக்கு உட்பட்டதுடன் அரசாங்க தரப்பினருடன் மிக நெருக்கமாக செயற்பட்டதுடன் அலரி மாளிகைக்கும் நெருக்கமானவராகவும், அதனால் பல விமர்சனங்களை தாண்டியும் கொழும்பில் செல்வாக்கு மிக்கவராக திகழ்;ந்து தனது கடந்தகால அரசாங்க பதவிகளை தக்கவைத்துக் கொண்டவர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நீண்ட போராட்டங்கள் அரசாங்கத்தின் கடுமையான எதிர் நடவடிக்கைகள் மத்தியில் பாரிய வெற்றியின் ஊடாக மாகாண சபையை கைப்பற்றியபின் மேற்கொள்ளப்படும் விடயங்கள் ஆரம்பத்திலேயே கடுமையான முரண்பாடுகளை தோற்றுவித்தால் எதிர்வரும் 5 வருடங்களை வட மாகாண சபை எவ்வாறு கடக்கப் போகிறது என்ற கேள்விகள் தமிழ் ஆர்வலர்களிடையே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
0 Comments