Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

த.தே.கூட்டமைப்பை கண்டித்து முல்லை மக்கள் ஆர்ப்பாட்டம்!(படம் இணைப்பு)

த.தே.கூட்டமைப்பை கண்டித்து முல்லை மக்கள் ஆர்ப்பாட்டம்!(படம் இணைப்பு)


இறுதி யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்துக்கு மாகாண அமைச்சு பதவி தருமாறு கூட்டமைப்பின் தலைமையை வலியுறுத்தி இன்று காலை முல்லைத்தீவு நகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

மாகாணசபை உறுப்பினர்கள் ஊடாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தருக்கு மகஜரும் கையளிப்பு.  
நடைபெற்று முடிந்துள்ள வடமாகாணசபை தேர்தலில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் 71 வீத வாக்களிப்பை பதிவு செய்து கூட்டமைப்பு சார்பில் தமது மாவட்டத்திலிருந்து நான்கு மாகாணசபை உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளனர். மாபெரும் வெற்றிக்குப்பின்னர் கூட்டமைப்பின் தலைமை மாகாண அமைச்சு பதவிகள் நான்கில் ஒன்றை கூட முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வழங்காது பாரபட்சம் காட்டுவதை வன்மையாக கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புகளினதும், பொது மக்களினதும் ஏற்பாட்டில் சேருவில பிரதேசசபை உறுப்பினர் சிவலோகேஸ்வரன் தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு நகரப்பகுதியில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.  
   
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் அமைப்பாளரும் மனித உரிமை ஆர்வலருமான சண் மாஸ்டர், மாகாணசபை உறுப்பினர்கள் சிவமோகன், ரவிகரன், பெருமளவிலான மாவட்ட மக்கள், வர்த்தக சமுகத்தினர், கடற்றொழில் சமாசத்தினர், கமக்கார ஒன்றியத்தினர், பொது அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாவட்ட பிரஜைகள் குழு அங்கத்தவர்கள், கிராம மாதர் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாவட்டத்தின் நலனில், அபிவிருத்தியில் அக்கறை கொண்டுள்ள நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டு கூட்டமைப்பின் தலைமைக்கு முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.   
கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், “வடமாகாணத்திலேயே யுத்தத்தினால் முழுமையாக அழிந்து போன எமது மாவட்டத்துக்கு அநீதி இழைக்காதீர்கள்”, “கொத்து குண்டுகளையும், எறிகணை சிதறல் துண்டுகளையும் உடலில் சுமக்கும் எமக்கு ஓரவஞ்சனை செய்யாதீர்கள்”, “பிரசார மேடைகளில் முள்ளிவாய்க்காலையும், முல்லைத்தீவு மண்ணையும் முன்னிறுத்தி பேசி விட்டு அமைச்சு பதவி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதேன்”, “கூட்டமைப்பின் தலைமையே மாகாண அமைச்சு பதவி ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டாதே”, “சம்பந்தர் ஐயா, சுமந்திரன் ஐயா, விக்கி ஐயா முல்லைத்தீவு மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்”, “சம்பந்தர் ஐயா யுத்தமும் சுனாமியும் ருத்ர தாண்டவமாடிய முல்லை மண்ணுக்கு அநீதி இழைக்காதீர்கள்”, என்று எழுதப்பட்ட சுலோக அட்டைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பினர். 
    
பொது மக்களின் அழைப்பையேற்று போராட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மாவட்ட மக்களின் நலனிலும் அக்கறை கொண்டுள்ள மாகாணசபை உறுப்பினர்கள் வைத்திய கலாநிதி மருத்துவர் சிவமோகன், து.ரவிகரன் ஆகியோர் ஊடாக மாகாண அமைச்சு பதவி ஒன்றை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு தர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.  

Post a Comment

0 Comments