கொழும்பு விபசார விடுதலை முற்றுகை, பெண்கள் கைது-
கொழும்பு, டாலி வீதியில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது விபச்சார விடுதியை நடத்திச் சென்ற பெண் ஒருவரும் அங்கிருந்த மேலும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திவுளப்பிட்டிய மற்றும் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நால்வர் கைது-
தனியார் நிறுவன ஊழியர்கள் எனக்கூறி வீடொன்றிற்கு சென்று பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி மற்றும் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நால்வர் யடவத்தை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று தொரகும்புர பகுதி வீடொன்றிலேயே இவர்கள் கொள்ளையிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர்களால் கொள்ளையிடப்பட்ட தங்கச் சங்கிலி, பணம் மற்றும் அவர்கள் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதோடு, இன்றையதினம் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
0 Comments