சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இண்டியன்ஸ் சம்பியன்
சம்பியன்ஸ் லீக் இருபது20 கிரிக்கெட் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணி சம்பியனாகியுள்ளது. இன்று டில்லியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 33 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் அணி வென்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்களைக் குவித்தது.
பதிலுக்குத் துடப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 18.5 ஓவர்களில் 169 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இறுதிப் போட்டியில் 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை இண்டியன் அணி வீரர் ஹர்பஜன் சிங் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார். அதே அணியைச் சேர்ந்த ட்வைன் ஸ்மித் சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணி இரண்டாவது தடவையாக சம்பியனாகியுள்ளது. இதற்குமுன் 2011 ஆம் ஆண்டிலும் அவ்வணி சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை சம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணிக்கு 25 லட்சம் அமெரிக்க டொலர்களும் (சுமார் 32.8 கோடி இலங்கை ரூபா) இரண்டாமிடம் பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு 13 லட்சம் அமெரிக்க டொலர்களும் (17. கோடி இலங்கை ரூபா) பணப்பரிசாக வழங்கப்பட்டன.
0 Comments