புறக்கணிப்பை பங்காளிக் கட்சிகள் உறுதிப்படுத்தின! சம்பந்தனது மிரட்டல்கள் காற்றினில் பறந்தது!!
வடக்கு மாகாண முதலமைச்சராகத்தெரிவு செய்யப்பட்டுள்ள சீ.வி.விக்கினேஸ்வரன் முதலமைச்சராக போர்க்குற்றவாளி மஹிந்த முன்னிலையினில் பதவியேற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபைக்கான அமைச்சர்களைத் தெரிவு செய்வாரென இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியேற்பு மற்றும் அமைச்சுக்கள் தெரிவு தொடர்பான இறுதிக் கூட்டம் இன்று இரவு கொழும்பில் நடைபெற்றபோதே பங்காளிக்கட்சித்தலைவர்களிடம் இரா.சம்பந்தன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எதிர்வரும் திங்கட்கிழமை போர்க்குற்றவாளி மஹிந்த முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சம்மந்தன் அங்கு அறிவித்தார். இதற்கு பங்காளிக்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. இது இரா.சம்பந்தனின் தனிப்பட்ட முடிவு எனவும் கடுமையாக விமர்சித்திருந்தன. எனினும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற அங்கத்தவர் சரவணபவன் போர்க்குற்றவாளி மஹிந்த முன்னிலையினில் பதவியேற்பதை பாராட்டி மனப்பூர்வமாக வரவேற்றிருந்தார். சிவஞானம் சிறீதரனோ தனக்கு தொடர்பில்லாத விடயம் போன்று சிக்கலில் சிக்காது மௌனம் காத்துள்ளார். அத்தோடு வாக்களித்த மக்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
புறக்கணிப்பை பங்காளிக் கட்சிகள் உறுதிப்படுத்தின! சம்பந்தனது மிரட்டல்கள் காற்றினில் பறந்தது!!
ஆயினும் அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக இன்றைய தினமே இறுதி முடிவெடுக்கப்படுமென்றும் நேற்றுத்தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய கூட்டத்திலும் எதுவித முடிவுகளும் எடுக்கப்படாமலேயே கூட்டம் முடிவடைந்தது. இதற்கமைய இன்று இடம்பெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் பதவியேற்பில் கூட்டமைப்பின் அனைத்துப்பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக சம்மந்தன் தெரிவித்தார்.
அத்தோடு முதலமைச்சர் பதவியேற்ற பின்னர் அமைச்சர்களை அவரே தெரிவு செய்யவாரென்றும் சம்மந்தன் தெரிவித்தார். ஆனாலும் இன்றை தினமும் கூட்டம் குழப்பத்திலேயே முடிவடைந்ததாக பங்காளிக் கட்சித்தலைவர்கள் அறிவித்துள்ளனர். அதாவது பதவியேற்பு விழாவிற்கு தமிழரசுக் கட்சியினைத்தவிர ஏனைய கட்சி தலைவர்களோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களோ செல்லப்போவதில்லை என இரா.சம்பந்தன் முன்னிலையிலையே அனைவரும் ஒன்று திரண்டு தெரிவித்துள்ளனர்.
இதற்கு இரா.சம்பந்தன் கடும் சீற்றமடைந்து கடும் எதிர்ப்பை தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதே வேளை தமிழரசுக்கட்சியிலும் பெரும்பாலானவர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்ற நிலையினில் இரா.சம்பந்தன் கும்பலது சர்வாதிகார போக்கிற்கு இதுவொரு ஆப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments: