வாழைச்சேனைப் பிரதேசத்தில் அதிகஷ்ரப் பிரதேச பாடசாலையில் ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஐயாயிரம் ரூபாய் பண உதவி நேற்று செவ்வாய்கிழமை வழங்கி வைத்தார். வாழைச்சேனை சுங்காங்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் குமாரசாமி கிஷான் (161 புள்ளிகள்) மற்றும் மிறாவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன், ஆகியோருக்கு இப்பண உதவியை வழங்கி வைத்தார். இரண்டு பாடசாலைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நேரடியாக சென்று இவ் உதவியை வழங்கி மாணவனையும், கற்பித்த ஆசிரியர்கள், அதிபர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.
|
![]() ![]() ![]() |
0 Comments