Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கனடியத் தமிழரை வரவேற்கத் தயாராகும் தலைநகர் ஒட்டாவா:

கனடிய அரசிற்கும் குறிப்பாக கனடியப் பிரதமர்; மாண்புமிகு ஸ்ரீபன் காப்பர் வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் அதன் தலைமைகள் கனடிய ஊடகங்கள் தமது சக கனடிய மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும் ஒட்டாவா கனடிய நாடாளுமன்ற முன்றலில் வரும் திங்கட்கிழமை ஒக்டோபர்; 28ஆம் நாள் நடைபெறவுள்ள மாபெரும் ஒன்றுகூடலுக்கு கனடிய தமிழ் மக்கள் பெருமெடுப்பில் தயாராகி வருகின்றார்கள் என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கனடா அரசு தொடர்ந்தும் வலியுறுத்தி நிற்கும் சுயாதீன சர்வதேச விசாரணையை விரைவில் ஏற்படுத்த வலியுறுத்தியும் நீதியான தமிழர் தீர்வின் அவசியத்தை எடுத்தியம்பியும் கனடியத் தமிழர் அமைப்புக்களின் ஒத்தாசையுடன் கனடியத்தமிழர் சமூகம் நடாத்தும் மாபெரும் கனடியத் தமிழர் ஒன்று கூடல் திங்கட்;கிழமை ஒக்டோபர்; 28ஆம் நாள் காலை 11 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இதில் பெருமளவில் கலந்து கொள்வதங்காக ரொரன்ரொ பெரும்பாகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து தமிழர்கள் பணி விடுப்பெடுத்து ஒட்டாவா நோக்கியப் பயணிக்க தயாராகி வருவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார். இவர்களுடன் மொன்றியல் கொன்வால் தலைநகர் ஒட்டாவா வாழ் தமிழர்களும் தயாராவதாக மேலும் அறியப்படுகின்றது.
இது குறித்த விபரம் அடங்கிய சுவரொட்டிகள் அனைத்து தமிழ் வர்த்தக நிலையங்களிலும் காணப்படுவதாகவும் பல வர்த்தக நிலையங்கள் தாமாகவே முன்வந்து பேருந்திற்கான பதிவுகளை செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பல தமிழ் ஊடகங்களும் இவ்விடயத்தை முதன்மைப்படுத்தி செய்திகளையும் தவகல்களையும் வழங்கி வருவதாகவும் மேலும் அறியப்படுகின்றது.
அதேவேளை வரவேற்பு மடல்கள் அரசியல் மட்டத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்கனவே உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டிருப்பதாகவும் பலர் ஏற்கனவே கலந்து உரையாற்றச் சம்மதித்திருப்பதாகவும் அரசியல் மட்ட விவகாரங்களை கவனித்து வரும் செயற்பாட்டுக்குழுவினர் செய்தியாளரிடம் மேலும் தெரிவித்தனர்.
ரொரன்ரோ பெரும் பாகத்தின் பல பகுதிகளிலும் இருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் பதிவுகளை உடன் மேற்கொள்ளுமாறு அதன் ஒருங்கமைப்பு குழு தெரிவித்துள்ளது. வரும் வெள்ளிக்குள் பதிவுகளை மேற்கொண்டால் பேருந்துகளை ஒழுங்கமைத்து ஏற்றுமிடங்களை தெரிவு செய்து சாப்பாடொழுங்குகளையும் நேர்த்தியா மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்றும் அதலால் கடைசிவரை பொறுத்திருக்காது பதிவுகளை உடன் மேற்கொள்ளுமாறும் அவர்கள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதேவேளை ஒட்டாவாவில் பல்வேறு இராஐதந்திர செயற்பாடுகளை அன்று முன்னெடுக்கும் பல்வேறு பணிகளை பல தமிழர் அமைப்புக்கள் பகிர்ந்து முன்னெடுத்து வருவதாக செயற்பாட்டாளர்கள் மேலும் அறியத்தந்துள்ளனர்.
இந்நிகழ்வில் பெருமளவில் கலந்து கொள்வதினூடாக இதுவரை எட்டப்பட்ட அரசியல் வலுநிலையை கனடியத் தமிழர்கள் மேலும் வலுப்படுத்தவேண்டும் என்றும் இச்செயற்பாடுகளை புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள உறவுகளும் தங்கள் நாடுகளில் அரசியல் ரீதியாக வலுவுடன் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் அறைகூவல் வடுக்கப்பட்டுள்ளது.
ஓற்றுமைப்பட்ட இனமாக ஒரணியில் அணிதிரள்வோம் என கனடிய தமிழர் சமூகம் கனடியத் தமிழர்களுக்கு நேசமுடன் அழைப்பு விடுத்துள்ளது. தொடர்புகளுக்கும் பேருந்து பதிவுகளுக்கும் 416-930-5937 அல்லது 647-203-6261 அல்லது 416-903-6058 என்ற தொலைபேசி இலக்கங்களில் உடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

Post a Comment

0 Comments