ஆனந்தி சசிதரன், விக்னேஸ்வரனின் முன்னிலையில் சத்தியபிரமாணம் மேற்கொள்ள மாட்டார்.
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலைப்
புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எஸ் . எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் , வடமாகண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் முன்னிலையில் சத்தியபிரமாணம் மேற்கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது .
சீ.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ முன்னிலையில் பதவி ஏற்க உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது . இந்த நிலையில் அவர் , மாகாண முதலமைச்சருக்கு பதிலாக , அரசாங்க அங்கீகாரம் பெற்ற சமாதான நீதவான் ஒருவரின் முன்னிலையில் மாகாண சபை உறுப்பினராக பதவி பிரமாணம் செய்துக் கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது .
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்கு சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்கவில்லை என்று அவர் , கூட்டமைப்பு மீது அதிருப்தியுடன் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . தேர்தல் காலங்களில் தம்மை பயன்படுத்தி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு , தற்போது கூட்டமைப்பு தலைமை தம்மை புறக்கணிப்பதாக , ஆனந்தி சசிதரன் கருதுவதாகவும் கூறப்படுகிறது .
0 Comments