ஓட்டுமொத்த புறக்கணிப்பு! முகத்தினில் கரியுடன் விக்கி மற்றும் சம்பந்தன்!!
வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் இன்று உத்தியோகபூர்வமாக இன்று தனது பதவியேற்பினை மஹிந்த முன்னிலையினில் செய்து கொண்ட போதும் பங்காளிக்கட்சிகள் மற்றும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களது பகிஸ்கரிப்பினால் அவர் துவண்டு போயுள்ளார்.
கூட்டமைப்பின் பிரதான பங்காளிக்கட்சிகள் எவையுமே பதவியேற்பு நிகழ்வினில் கலந்து கொள்ளவில்லை. வெறுமனே கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருடன் விநாயகமூர்த்தியும் பிரசன்னமாகியிருந்தார்.கூட்டமைப்பிற்கான அண்மைய வரவும் அமைச்சு பதவிக்கு காத்திருப்பவருமான சித்தார்த்தனும் மட்டுமே அங்கு சமூகமளித்திருந்தார்.இந்தியா சென்றிருந்த பொது செயலாளர் மாவை வருகை தந்திருக்கவில்லை.
பங்காளிக்கட்சிகளான டெலோ மற்றும் ஈபிஆர்எல்எவ் மற்றும் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றிராமை கூட்டமைப்பு தலைமைக்கு கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.விநாயகமூர்த்தியும் சுமந்திரன் அனைவரும் வருகிறார்கள் வாருங்களென விடுத்த அழைப்பினையடுத்தே அங்கு சென்றிருந்ததாகவும் எனினும் ஒட்டு மொத்த புறக்கணிப்பினால் பங்கெடுக்க முடியாது திண்டாடியதாகவும் வெளியேற முடியாத இக்கட்டினில் தான் இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நடந்து முடிந்த வடக்கு தேர்தலினில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றியீட்டிய கூட்டமைப்பு முதலமைச்சரை மஹிந்த முன்னிலையினில் சத்தியப்பிரமாணம் செய்ய வைக்கும் நடவடிக்கையால பாரிய விரிசலை கண்டுள்ளமை அதிர்வலைகளையே தோற்றுவித்துள்ளது.
0 Comments