மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு மாதங்களுக்கு மேலாக தொடரும் வரட்சி காரணமாக இந்திய உதவி வீடமைப்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக பயனாளிகள் தெரிவிக்கின்றார்கள்.
இம் மாவட்டதில் முதலாவது தொகுதி இந்திய வீடமைப்பு வேலைகள் தற்போது செங்கலடி பிரதேச செயலக பிரிவிலுள்ள உறுகாமம் , புல்லுமலை மற்றும் மங்களாகம ஆகிய இடங்களில்ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன.
தற்போது நிலவும் வரட்சி காரணமாக இந்த பகுதியில குளங்களும் கிணறுகளும் நீர் நிலைகளும் நீர் இன்றி வரண்டு காணப்படுகின்றன.
இதனால் வீடு கட்டுமாண பணிகளுக்கு தேவையான நீரைப் பெறுவதில் பயணாளிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதை காண முடிகின்றது.
நாளொன்றுக்கு குறைந்தது 4 பரல் நீர் தங்களுக்கு தேவைப்படுவதால் வெளியிடங்களிலிருந்து ஒரு பரல் நீர் ருபா 500க்கு தாங்கள் கொள்வனவு செய்வதாக பயணாளிகள் தெரிவிக்கினறார்கள்.
வீடமைப்புக்கான மொத்த கொடுப்பணவு ருபா 5 இலட்சத்து 50 ஆயிரம். கட்டம் கட்டமாகவே இந்த கொடுப்பணவு இவர்களது வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது.
பயனாளிகளை பொறுத்த வரை தற்போதைய வரட்சி நிலை காரணமாக தண்ணீருக்கு மேலதிகமாக ஏற்பட்டுள்ள செலவுகளை அவர்களே பொறுப்பேற்க வேண்டியவர்களாக உள்ளனர்.
உறுகாமம் கிராமத்தை சேர்ந்த பயனாளிகளில் ஒருவரான சின்னத்தம்பி அஸ்ரப் ருபா 45 ஆயிரம் தொடக்கம் 60 ஆயிரம வரை தங்களுக்கு மேலதிக செலவு ஏற்படுவதாக சுட்டிக்காட்டுகின்றார்.
குறித்த மேலதிக செலவு தொடர்பாக வீடமைப்பு பணிகளுக்கு பொறுப்பான இந்திய ஹபிடாஸ் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டாலும் ஏற்கனவே இந்த செலவுகளை தங்களால் ஏற்க முடியாது என பதில் தரப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments