மட்டக்களப்பில் கடல் அட்டை பிடித்தவர்கள் கைது
மட்டக்களப்பு வாகரைக் பிரதேச கடலில் அனுமதிப்பத்திரமின்றி கடல் அட்டை பிடிக்கும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலரை வாகரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரதேச மக்கள் இவர்களுக்கு எதிராக செய்த முறைப்பாட்டினையடுத்து வாகரைப் பிரதேச கடல்தொழில் பரிசோதகர் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது நேற்று புச்சாக்கேணியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது 3 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெளியினை இயந்திரப்படகுகள் 2, அதற்கு பயன்படும் இயந்திரங்கள்2, சிலின்டர்கள்- 12, கடல் அட்டைகளுடன் கூடிய பரல்கள் 03, நீச்சல் உடைகள் 04 செட், போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாகரை பதில் பொலிஸ் பரிசோதகர் ஜ.பி.ஜெயசீலன் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் வழக்கு சான்று பொருளாக பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன். சந்தேக நபர்கள் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
0 Comments