Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு ஏறாவூர் விபத்தில் குடும்பஸ்தர் மரணம் -

மட்டக்களப்பு ஏறாவூர்  விபத்தில் குடும்பஸ்தர் மரணம் - 



மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வந்தாறுமூலைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார். 




சித்தாண்டி, மாவடிவேம்பு கிராம அபிவிருத்திச் சங்க வீதியில் வசிக்கும் 8 பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் உதயகுமார் (வயது 50) என்பவரே இந்த விபத்தில் மரணமடைந்துள்ளார்.

பஸ் வண்டி ஒன்றும் சைக்கிள் ஒன்றும் நேருக்குநேர் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. 

வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியும் வந்தாறுமூலை பகுதியிலிருந்து வந்துகொண்டிருந்த   சைக்கிளுமே மோதி விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் மரணமடைந்தவர் மாவடிவேம்பில் உள்ள தனது வீட்டுக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோதே விபத்திற்குள்ளானார். 

சடலம் செங்கலடி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

மேலும்,  குறித்த பஸ் வண்டியை ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விரிவான  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பஸ் வண்டியின் சாரதியை பிடிக்க முற்பட்டபோது சாரதி தப்பியோடியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments