மட்டக்களப்பு வந்தாறுமூலை குடிசைகளுக்கு தீவைத்த நபர் கைது
மட்டக்களப்பு வந்தாறுமூலை அழகாபுரியில் பொதுமக்கள் குடியிருந்த குடிசைகளுக்கு தீ வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் செய்த முறைப்பாட்டினையடுத்து நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை மாலை ஏறாவூர் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் செங்கலடி வர்த்தக சங்கத் தலைவரினால் குடியிருப்பு நிலம் இல்லாத பொது மக்கள் இனம் காணப்பட்டு மேற்படி பிரதேசத்தில் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.
இதன்போது 05 குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் மேலும் தீ பரவாமல் தடுப்பதற்க்கான நடவடிக்கையினை பிரதேச இளைஞர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.
0 Comments