Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

யானையின் தாக்குதலிலிருந்து தப்பிய இளைஞர், முதலையிடம் அகப்பட்டார் மட்டக்களப்பு கரடியனாறில் சம்பவம்



யானையின் தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ளும் முகமாக ஆற்றில் பாய்ந்த இளைஞர் ஒருவரை முதலை கடித்துக் குதறியுள்ளது.

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உறுகாமம், மஞ்சாடிச்சோலை காட்டுப்பகுதியில் உள்ள சிப்பிமடு ஆற்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பி.செல்வகுமார் (வயது 27) என்ற இளைஞரையே முதலை இவ்வாறு கடித்துக்குதறியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்த இளைஞர்; தனது மாட்டுப் பட்டிக்குச் சென்று பால் கறந்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த காட்டு யானை ஒன்று இவரை துரத்த ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், யானையின் தாக்குதலிருந்து தப்பித்துக்கொள்ளும் முகமாக வேகமாக ஓடிய இந்த இளைஞர் அருகிலிருந்த சிப்பிமடு ஆற்றில் குதித்துள்ளார். இதன்போது ஆற்றில் இருந்த முதலை இந்த இளைஞரைக் கடித்துக் குதறியுள்ளது.

இவரின் கூக்குரல் சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் இந்த இளைரை முதலையின் வாயிலிருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

உடனடியாக கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த இளைஞர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Post a Comment

0 Comments