மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நரிப்புல் தோட்டம் பிரதேசத்திலிருந்து பங்குடாவெளி கரைக்கான சுமார் 150 மீற்றர் நீளமான ஆழம்மிக்க வாவியைக் கடக்க ஐம்பது வருடங்களுக்கு மேலாக கட்டு மரங்களும் தோணிகளுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மகிழவட்டுவான், பன்குடா, நெல்லிக்காடு, ஆயத்தியமலை, கரவெட்டி, விளாவெட்டுவான், நாவற்காடு மற்றும் ஈச்சந்தீவு போன்ற பிரதேச மக்கள் தமது குறுந்தூர பயணத்திற்காக தலா 40 ரூபா பணத்தினைச் செலுத்தும் கட்டுத் தோணிகளையே நம்பியுள்ளனர்.
பயணம் செய்யும் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். இரண்டு தோணிகள் பிணைக்கப்பட்ட ஒரேயொரு பாதையே சேவையில் ஈடுபடுத்துப்படுவதனால் அது மறுகரையிலிருந்து திரும்பி வந்து போதுமான ஆட்கள் சேரும் வரை காத்தருக்கும் நிலை இருப்பதனால் குறித்த நேரத்திற்கு தமது பயணத்தை நிறைவு செய்ய முடியாதுள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். நரிப்புல் தோட்ட வாவிக்கரை வீதியம் கரடுமுரடானதாகவே உள்ளது. பாலம் அமைப்பதற்கு முதற்கட்டமாக பாதையைச் செப்பனிடப் போவதாக சில வருடங்களுக்கு முன்னர் இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த அதிகாரிகள் வீதியின் நீள அகலத்தை அளந்து அடையாளங்களை இட்ட போதிலும் இதுவரை பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.
0 comments: