திருகோணமலை மாவட்டம் சீனக்குடா, கருமலையூற்று கடலில் மூழ்கி 16 வயதான பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று முற்பகல் நடந்துள்ளது. வெள்ளை மணல் பகுதியை சோந்த மீராசஹீப் முகம்மது பர்ஹான் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளை மணல் அல் - அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் இந்த மாணவன், நண்பர்களுடன் கருமலையூற்று கடலில் நீராடச் சென்றுள்ளார். நீராடிவிட்டு வெளியே வந்த அவர், துவிச்சக்கர வண்டியின் திறப்பு தொலைந்து போன நிலையில், மீண்டும் கடலில் இறங்கி தேடிக் கொண்டிருந்த போதே கடலில் மூழ்கியுள்ளார். உயிரிழந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டு கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments