Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த சொகுசு பஸ் தீக்கிரை

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்றிரவு பயணித்த தனியார் சொகுசு பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.


வெள்ளவத்தையிலிருந்து சென்ற அதிசொகுசு தனியார் பஸ்ஸே தீக்கிரையாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மாதம்பே பகுதியில் உள்ள 67ம் வளைவில் வைத்தே குறித்த பஸ் நேற்று சனிக்கிழமை இரவு தீக்கிரையாகியுள்ளது.
தீ அனர்த்தம் ஏற்படும் போது குறித்த பஸ்ஸில் 25 பயணிகள் வரையில் இருந்துள்ள போதிலும், பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
தொழிநுட்ப கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போலி இலக்கத் தகட்டுடன் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் புலிகளின் வாகனங்கள்


போர் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்டுத்தப்பட்ட வாகனங்கள், தற்போது போலி இலக்கத்தகடுகளுடன் போக்குவரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் குறித்த வாகனங்கள் கொண்டு வரப்பட்டு, போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொழும்பு மற்றும் நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களில் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு வாகனங்களைக் கொண்டு வந்த சிலர் புலிகளுக்கு உதவிகளை வழங்கியவர்கள் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
வாடகை அடிப்படையில் சில போர் காலத்தில் புலிகளுக்கு வாகனங்களை வழங்கியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.



பாகிஸ்தானின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்புக்கு வருகை - கண்டியில் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி நபரொருவர் கொலை


பாகிஸ்தானின் இரண்டு போர்க்கப்பல்கள் நான்கு நாள் நல்லெண்ண பயணத்தின் அடிப்படையில் கொழும்பு துறைமுகத்துக்கு இன்று வருகை தரவுள்ளன.
பிஎன்எஸ் என்ஏஎஸ்ஆர் மற்றும் கஹாய்பார் என்ற இரண்டு கப்பல்களே இலங்கை வரவுள்ளன.
இதில் முதலாவது கப்பல் உதவி செய்தல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் கப்பலாகும்.
இந்த கப்பல் 2004 ஆம் ஆண்டு மாலைத்தீவில் சுனாமி மீட்புப்பணிகளில் ஈடுபட்ட கப்பலாகும். இரண்டாவது கப்பலானது பாகிஸ்தான் கடற்படையில் முக்கிய பங்கை வகிக்கிறது.
கண்டியில் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி நபரொருவர் கொலை 
கண்டி பொல்வத்தை அம்பிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறு கைமீறி சென்றத்தில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று நடந்த இந்த சம்பவத்தில் பொல்வத்தை அம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கொலையுடன் சம்பந்தப்பட்ட நபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


சீன நிறுவனத்துக்கு கொழும்பில் கடல் பகுதி குத்தகைக்கு கொடுக்கப்படுகிறது!


இலங்கை சீனாவுடன் கடல் சீரமைப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சீனாவின் தொலைத்தொடர்பு நிர்மாண நிறுவனம் கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள 230 ஹெக்டயர் கடல்பரப்பில் நிர்மாணங்களை மேற்கொள்வதன் பொருட்டு இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது.
இதன் பொருட்டு சீன நிறுவனம் 1430 அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளது.
இதன்கீழ் முதல் கட்டமாக கடலுக்கு கீழ் நிர்மாணங்கள் மற்றும் வீதி அமைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அடுத்த கட்டமாக ஐந்து நட்சத்திர ஹோட்டல் வர்த்தக தொகுதி மற்றும் குடியிருப்பு மாடித்தொகுதி என்பன அமைக்கப்படவுள்ளன.
இந்த திட்டத்தின்படி சீன நிறுவனத்துக்கு கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடல் பகுதி 99 வருட குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது.

Post a Comment

0 Comments