Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அகதிகள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுவது ஆபத்தானது: ஆஸி. மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கையில் இருந்துவரும் அகதிகளை திருப்பினுப்பும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் செயற்பாடு ஆபத்தானது என்று அவுஸ்திரேலியாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் நைன் நியூஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அதேநேரம் அகதிகளை தடுத்து வைக்கும் செயற்பாடுகளில் அவுஸ்திரேலியா மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையாளர் கில்லியன் ரைக்ஸ் கோரியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்குள் வரும் அகதிகள் உண்மையான அகதிகளா என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் சர்வதேச கடப்பாட்டை கொண்டிருக்கிறது.

எனவே குடிவரவு கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்படவேண்டும். அவுஸ்திரேலியாவில் 6579 பேர் அரசியல் புகலிடம் கோரிய நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 1428 சிறுவர்களும் அடங்குவதாக செப்டம்பர் 5ம் திகதி எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments