பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடையா?
பல்வேறு கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தி வரும் சமூக வலைத் தளங்களில் ஒன்றான பேஸ் புக்கை தடை செய்ய முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பேஸ் புக் இணையம் ஓர் தொற்று நோயைப் போன்று பரவி வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் பல்வேறு சமூக சீரழிவுகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் இணையத்தை சட்ட ரீதியாக தடை செய்ய முடியாவிட்டாலும் வேறும் வழிகளில் அதன் பயன்பாட்டை தடை செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பேஸ்புக் பல்வேறு கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களை தடை செய்வது குறித்து அரசாங்கம் இதுவரை எதுவித முடிவுகள் எடுக்கவில்லை என ஆளும் கட்சி பிரதம கொரடா தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் முகநூல் தடை செய்யப்படும் என பலர் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அரசாங்கம் ஏதேனும் முடிவுகளை எடுத்துள்ளதா என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தினேஷ் குணவர்த்தன, பரவும் வதந்திகளை நிராகரிப்பதாகவும் அரசாங்கம் இதுவரை அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும் கூறினார்.
0 Comments