மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக்கல்வி(களுவாஞ்சிகுடி) அலுவலகம் முன்பாக விபத்துச் சம்பவம் (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
களுவாஞ்சிகுடி கல்முனை வீதியில் தனியாருக்குச் சொந்தமான பஸ்வண்டி இன்று பி.ப 3.00 மணி அளவில் விபத்துக்குள்ளாகியது. விசேட சேவை ஒன்றிற்காக கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான பஸ்வண்டி பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகம் முன்பாக சாரதியின் கட்டுப்பாட்டை மீறி கானுக்குள் இறங்கியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் இடம் பெற்ற இடத்துக்கு அண்மையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments