இவரைக் காணவில்லை.. கண்டால் அறியத் தாருங்கள்..!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்டூர் 01 சேர்ந்த சிவகுமாரன் மயுரா (23) என்பவர் தேர்வு பரீட்சைக்கான மட்டக்களப்பு மகாயன கல்லூரிக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக வெல்லாவெளி போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
21.09.2013 அன்று குறித்த பரீட்சைக்கு செல்வதாக உறவினருக்கு இறுதியாக தெரிவித்திருந்தார்.
எனினும் தற்போது 9 நாட்கள் கடந்த நிலையிலும் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுபற்றி, இவரை கண்டாலோ அல்லது இவர் பற்றிய தகவல் அறிந்தாலோ அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு அறியத் தருமாறு உறவினர்கள் கேட்டுள்ளனர்.
0 Comments