Home » » இன்று சிறுவர் தினம்...

இன்று சிறுவர் தினம்...

இன்று சிறுவர் தினம்...



குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சிறுவர் தினம் ஐக்கிய நாடுகள் அவையினால்(unicef) 1954 ஆம் ஆண்டு  பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கையில் இன்றைய தினம் இது (ஒக்டோபர்  1 ஆம் திகதி)  கொண்டாடப்படுகிறது.  எனினும் ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு தினங்களில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.  சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கான காரணம் சிறுவர்களுக்கெதிராக  அரங்கேற்றப்படுகின்ற  துஷ்பிர யோகங்ளையும் அநீதிகளையும் இயன்றளவு குறைத்து அவர்களுக்கான சகலவிதமான உரிமைகளையும்  பெற்றுக் கொடுப்பதேயாகும்.  மேலும் இனிவரும் காலங்களில் சிறுவர் தினத்தில் தரம் 5 இற்கான புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துலகுணவர்த்தன தெரிவித்துள்ளார். அதோடு இன்று உலக முதியோர் தினமும் கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் இந்த நாளிலே நினைவுகூறப்படும். ஏனெனில் சிறுவர் துஷ்பிரயோகம் உலகமெங்கிலும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதனை இல்லாமல் ஒழிக்க பல நாடுகள் பல சட்டங்களை கொண்டுவந்தாலும் இது ஓய்ந்த பாடில்லை. பல காரியங்கள் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுவதால் பிற்காலத்தில் அவர்கள் ஒரு வன்முறையாளர்களாக வருவதற்கான சாத்தியமே உண்டு.   சிறுவர்களின் அடிப்படை உரிமையான கல்வியை அவர்கள் பெற்றுக் கொள்ளவேண்டும். பல சிறார்கள் இன்றைய நாளை சந்தோஷமாக கொண்டாடினாலும், நாம் அறியாத பல சிறு உள்ளங்கள் வேதனையிலும், கஷ்டத்திலும், சித்திரவதைகளிலும் தங்கள் காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறான சிறுவர்களை நாம் இன்றைய நாளில் நினைத்துப் பார்க்க வேண்டும். இதற்காக நாம் அவர்களுக்காக பிரார்த்திப்பது நம் கடமையாக இருக்கின்றது.     மேலும் ஐ.நா சபையானது 18வயதுக்குட்பட்ட அனைவரையும் சிறுவர்கள் என வரையறுத் துள்ளது. சிறுவர்கள் எதிர்கால உலகின் 
அத்திவாரம் என்ற வகையில் அவர்களது எதிர்காலத்தைச் சிறப்பாக்கத் திட்டமிட்டு வழிநடத்த வேண்டும். ஆனால் இன் றைய மனித சமுதாயமானது நாகரிகத்தின் விளிம்பை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் அதேவளை சிறுவர்களுக்கெதிராக மேற் கொள்ளப்படும் வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்துக் கொண்டேசெல்கின்றன.சிறுவர் துஷ்பிரயோகத் தின் பல்வேறு வடிவங்கள் * உடலியல் ரீதியான துஷ்பிரயோகம். * உளவியல் ரீதியான துஷ்பிரயோகம். * பாலியல்ரீதியான துஷ்பிரயோகம். * உணர்வு ரீதியான துஷ்பிரயோகம்.

* புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகம்.  குறிப்பாக உலகில் உள்ள அனைத்துசிறுவர்களும் இவற்றுள்  ஏதாவதொரு துஷ்பிரயோகத்திற்கு முகம் கொடுத்தேவருகின்றனர் என்பதனை ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. சிறுவர்களைப் பாதுகாப்பதற் கான பல ஏற்பாடுகள் இன்றைய நவீன உலகில் காணப்பட்டாலும் கூட அவற்றையும் மீறி சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப் பட்டு வருகின்றனர். மேற்படி சிறுவர்  துஷ்பிரயோக வடிவங்களை நீக்குவதற்காக உலகின் பல அரசுகள், அரச சார்பற்றநிறுவனங்கள், சமூக மற்றும் சமய நிறுவனங்கள் போன்ற வற்றால் பல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மேற்படி அனைத்து நிறுவனங்களினதும்சேவைகளை ஒருங்கிணைத்து நடை முறைப்படுத்துவது அத்தியவசியமாகும். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு உலக சிறுவர்தினத்தை சிறப்பாக திட்டமிட்டுப் பயன்படுத்தலாம். மேலும் சிறுவர் தினம்  சம்பந்தமாக குறிப்பிட்ட தினத்தில் மாத்திரம் மும்முரமாக செயற்படுவதில்எந்தப் பயனும் இல்லை. வருடத்தில் ஏனைய நாட்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் அனைத்து தரப்பினரதும் கவனத்திற்கு உட்பட வேண்டியதுஅவசியமாகும்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |