Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பட்டினி'யில் இலங்கைக்கு 43 ஆவது இடம்

பட்டினி'யில் இலங்கைக்கு 43 ஆவது இடம்




பட்டினி'யில் ஆபத்தான நிலையில் தற்போதும் இலங்கை உள்ளதாகவும் 2013 பட்டினி சுட்டியில் இலங்கை 43 ஆவது இடத்திலுள்ளது என்றும் அந்த சுட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்மட்டத்திலிருந்து முன்னேறி உலக பட்டினி சுட்டி  2013 இல் 63 ஆம் இடத்துக்கு வந்துள்ள இந்தியாவில் பட்டினி கிடப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.


எனினும் அது சீன, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு கீழேயே உள்ளது.

உலக பட்டினி சுட்டியில் சீனா,பட்டினி மட்டத்தில் 6ஆம் இடத்தில் உள்ளது. இலங்கை 43 ஆவது, பாகிஸ்தான் 57ஆவது, பங்களாதேஷ் 58 ஆவது இடங்களை பெற்று கடுமையான பட்டினி மட்டத்திலிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த சுட்டி 120 அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பட்டினி மட்டத்தை காட்டுகின்றது. இந்த சுட்டியை தயாரிக்கும் போது மந்த போஷனை உடையோரின் விகிதாசாரம்இ ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளில் நிறை குறைந்த பிள்ளைகளின் விகிதாசாரம்இ ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் மரண வீதம் ஆகிய மூன்றும் சம அளவில் கருத்தில் எடுக்கப்பட்டன. 

Post a Comment

0 Comments