இளவரசர் வில்லியம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய பொலிசார் |
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மீது பொலிசார் பெட்ரோல் குண்டுகளை வீசியது தற்போது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கலவரத்தில் சிக்கிக் கொண்டால் தன்னையும், தனது குடும்பத்தாரையும் காப்பாற்ற அவருக்கு ரகசியமாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அந்த பயிற்சியின் போது பொலிசார் வில்லியம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
எந்த ஆபத்தான சூழலையும் சந்திக்கவே அவருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது குண்டு வீசப்பட்டது குறித்து பயிற்சியில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரின் மகள் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், பயிற்சியின் போது என் தந்தையும் வில்லியம் மீது பெட்ரோல் குண்டு வீசினார் என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.
இந்த ரகசிய பயிற்சி மெட்ரோபாலிடன் பொலிஸின் கலவர பயிற்சி மையத்தில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
|
0 Comments