அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த 33 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!
அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் சென்ற இலங்கையர்கள் 33 பேர் மீண்டும் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றைய தினம் கிறிஸ்மஸ் தீவிலிருந்து விசேட விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளவர்களில் 8 சிறுவர்கள் மற்றும் 8 பெண்கள் உள்ளிட்ட 33 பேர் உள்ளடங்குவதாகவும்,
இவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலையிலிருந்து படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற நிலையில், அங்கு புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே இவர்கள் மீண்டும் நாட்டிற்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Comments