Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

டி20 யில் ஆஸியை வீழ்த்தியது இந்தியா:மீண்டும் ஃபோர்முக்கு திரும்பிய யுவராஜ் சிங் அதிரடி!

டி20 யில் ஆஸியை வீழ்த்தியது இந்தியா:மீண்டும் ஃபோர்முக்கு திரும்பிய யுவராஜ் சிங் அதிரடி!


ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 பந்துகள் மீதமிருக்க வெற்றியை தனதாக்கியது.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை எடுத்தது. ஃபின்ச் 89 ஓட்டங்களையும் மடின்சன் 34 ஓட்டங்களையும் எடுத்தனர்.


பந்துவீச்சில் பிரவீண் குமார் 3 விக்கெட்டுக்களையும், வினய் குமார் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே ரோஹித் ஷர்மாவை பறிகொடுத்தது. ஆனால் ஷேகர் டவான் 32 ஓட்டங்களையும், விராத் கோலி 29 ஓட்டங்களையும் எடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். அடுத்து களமிறங்கிய யுவராஜ் சிங் 35 பந்துகளில் 77 ஓட்டங்களை குவித்தார். இதில் 8 பவுன்றிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும். புற்றுநோயிலிருந்து மீண்ட யுவராஜ் சிங் ஃபோர்மில் இல்லாததால் அணியில் இடம்பிடிக்க மிகவும் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டார். பயிற்சிப் போட்டிகளில் ஃபோர்முக்கு திரும்பியதை அடுத்து அவரை பிசிசிஐ திரும்ப அழைத்துக் கொண்டது. இதையடுத்து டி20 போட்டியில் களமிறங்கிய யுவராஜ் சிங் தனது அதிரடி மூலம் தனது பழைய ஃபோர்மை நிரூபித்துள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி அக்.13ம் திகதி புனேயில் நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments