இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் முதியவர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுதிறனாளியான ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் வசிக்கும் 84 முதியவர் ஒருவர் ஒரு சிறுமியை கடத்திவைத்து கடந்த 10 ஆண்டுகளான பாதாள அறையில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் வாழ்ந்து வந்த இலியாஸ் அஷ்கார் 84 என்ற வயது முதியவர், பாகிஸ்தானை சேர்ந்த 10 வயது உடல் ஊனமுற்ற சிறுமியை கடத்தி வந்து, தனது வீட்டின் பாதாள அறையில் அடைத்து வைத்துள்ளார்.
அச்சிறுமி காது கேளாத, வாய் பேச முடியாத பெண் என்பதால் அவளால் யாரிடமும் உதவி கேட்க இயலாமல் போயுள்ளது. இந்நிலையில், இலியாஸ் மற்றும் அவரது மனைவி தால்லட் அஷ்கார் ஆகியோர் சிறுமியை கொத்தடிமை போல் நடத்தி கொடுமைப் படுத்தியுள்ளனர்.
0 comments: