வருகிற 2032 ஆம் ஆண்டில் பூமியை ஒரு ராட்ஷச விண்கல் தாக்குமென்றும், இதனால் உலகம் அழியும் ஆபத்து உள்ளதாகவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளியில் அனுமிங்கும் மிதக்கும் விண்கற்களில் சில பூமியை நோக்கி பயணிக்கின்றன. இத்தகைய விண்கற்களில் பெரும்பாலானவை பூமியை நெருங்குவதற்கு முன்பே வெடித்துவிட, சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவில் விழுந்த விண்கல்லால் பாதிப்பும் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் இன்னும் 19 ஆண்டுகளில் அதாவது 2032 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி மற்றொரு ராட்ஷச விண்கல் பூமியை தாக்கும் அபாயம் உள்ளதாகவும், 1345 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் பூமியை தாக்கினால் உலகம் முற்றிலுமாக அழியும் அபாயம் உள்ளதாகவும் விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments