செவ்வாயில் தண்ணீர், வெள்ளம் ஏற்பட்டதற்கான தடயத்தை கண்டு பிடித்தது கியூரியோசிட்டி
செவ்வாய்க் கிரகத்தின் தரை மேற்பரப்பில் இருந்து அதனைஆய்வு செய்து வரும் நாசாவின் நவீன ரோபோட்டிக்விண்வண்டியான
சமீபத்தில் அங்குபண்டைய நதிப்படுக்கையின் ஒருபகுதியானஹொட்டாஹ்(Hottah) எனும்பிரதேசத்தைக்கண்டு பிடித்துப்புகைப் படங்களைஅனுப்பியுள்ளது.
இதன் மூலம் செவ்வாயில் பல்லாயிரக் கணக்கானவருடங்களுக்கு முன்னர் வெள்ளப் பெருக்குஏற்பட்டதற்கான சான்று கிடைத்துள்ளது. இது அங்குதண்ணீர் இருப்பதற்கான முக்கிய சாத்தியக் கூறைத்தோற்றுவித்துள்ளது. ஆகஸ்ட் 2012 இல் செவ்வாயின் கேல்பள்ளத்தாக்கை (Gale Crater) சென்றடைந்த கியூரியோசிட்டிஅங்கு பக்டீரியா வடிவில்.உயிர் வாழ்க்கை உள்ளதா?
வருங்காலத்தில் மனிதன் குடியேறுவதற்கு ஏற்ற விதத்தில்ஏதேனுன் வடிவில் நீர் உள்ளதா? போன்ற விடயங்களைஆராய்ந்து வருகின்றது. லண்டனில் செப்டம்பர் 8 இலிருந்துசெப்டம்பர் 13 வரை லண்டனில் இடம்பெற்ற ஐரோப்பியகோள் விஞ்ஞான மாநாட்டில் (European Planetary Science Congress) கியூரியோசிட்டியின் உன்னத கண்டுபிடிப்புக்களைவிஞ்ஞானிகள் முன்வைத்தனர். இதில் செவ்வாயில்ஐதரசன், ஹைட்ரேஷன், கற்கள், மற்றும் முக்கியமாகதண்ணீர் குறித்து இதன் ஆய்வுகள் விளக்கப் படுத்தப்பட்டன.
இதில் கியூரியோசிட்டியின் முக்கிய ஆய்வாக பண்டையகாலத்தில் செவ்வாயில் நுண்ணுயிர் வடிவில் உயிர்வாழ்க்கைக்கு செவ்வாய்க் கிரகம் பங்களித்ததற்கானதடயங்களை அறிவதே என்றும் கூறப்பட்டது. ஏற்கனவேகேல் பள்ளத்தாக்கில் உள்ள பாறைகளை கியூரியோசிட்டிதுளையிட்டு ஆராய்ந்த போது அதில் கிளே போன்றகனிமங்கள் இருந்தது அறியப் பட்டது. கியூரியோசிட்டிக்குமுன்னர் செவ்வாய்க்கு அனுப்பப் பட்ட ஸ்பிரிட் மற்றும்ஆப்பர்சுனிட்டி ரோவர் ஆகிய விண்கலங்களும் பண்டையசெவ்வாயில் கடும் அமிலத் தன்மையுடன் தண்ணீர்இருந்தமைக்கான சான்றுகளை கண்டு பிடித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.
0 Comments