இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழித்த கும்பல்
தலைநகர் டெல்லியில் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவர், ஒரு கும்பலால் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு டெல்லி சுஷாந்த் லோக் பகுதியில் சுமார் 25 வயது இளம்பெண் ஒருவர் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று, தனிமையான இடத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.
பின்னர் அந்த நான்கு பேரும், மயங்கிய நிலையில் இருந்த அப்பெண்ணை அப்பகுதியில் உள்ள ஆர்ட்மிஸ் மருத்துவமனை அருகே வீசிவிட்டு தப்பித்துச்சென்றனர்.
சாலையோரம் பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்தது கண்ட அப்பகுதி மக்கள், இவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments