நடுவானில் பலமணிநேரம் அசந்து தூங்கிய விமானிகள்
325 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், விமானிகள் இருவரும் பல மணி நேரம் தூங்கியுள்ளனர்.
பிரித்தானியாவைச் சேர்ந்த, விமானம், கடந்த மாதம் 13ம் திகதி, 325 பயணிகளுடன் புறப்பட்டது.
சிறிது நேரத்தில், விமான பைலட், விமானத்தை, "தானியங்கி நிலை´க்கு (ஆட்டோபைலட் மோட்) மாற்றிவிட்டு தூங்கினார்.
இரவு வெகு நேரம் நன்கு தூங்கிய பைலட், விழித்து பார்த்தபோது, துணை பைலட்டும், குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார்.
இரவு முழுவதும், விமானிகளின் கண்காணிப்பின்றி, தானியங்கி முறையில் விமானம் இயங்கியது தெரியவந்தது. இதுகுறித்து, சிவில் விமான போக்குவரத்துக் கழகத்திடம், இரு விமானிகளும் தங்கள் செயலுக்கான அறிக்கையை அளித்தனர்.
அதில், எவ்வளவு நேரம் கண்காணிப்பின்றி விமானம் பறந்தது தெரியவில்லை என்றும், தொடர்ந்து பணியில் ஈடுபட்டதால், சோர்வு ஏற்பட்டு, தூங்கிவிட்டதாகவும் தெரிவித்து இருந்தனர்.
விமான போக்குவரத்து அதிகாரிகள் கூறியிருப்பதாவது, விமான போக்குவரத்து ஒழுங்கு விதிகளின்படி, விமானம் பறக்கும் போது ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து விமானிகள் அறிக்கை தர வேண்டியது அவசியம்.
இரு பைலட்களில், ஒருவர், ஏழு மணி நேர இடைவெளியில், விமானத்தை ஓட்டியுள்ளார். அவர் அதிக நேரம் தூங்கியிருக்கக் கூடாது. அவர் விழித்து எழுந்த போது, துணை விமானியும் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
0 Comments