Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காணி, பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக்கொள்ளப்படும்!– சீ.வி. விக்னேஸ்வரன்

காணி, பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக்கொள்ளப்படும்!– சீ.வி. விக்னேஸ்வரன்

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை இலங்கை மத்திய அரசாங்கம் வழங்கத் தவறினால், சர்வதேச சமூகத்தின் ஆதரவினை பெற்றுக்கொள்ள நேரிடும்.
சர்வதேச சமூகத்தின் மத்தியஸ்தத்துடன் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
மாகாணசபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
அரசாங்கம் தொடர்ந்தும் உதாசீனப் போக்கைப் பின்பற்றினால் மக்களுக்காக கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்.
13ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஏற்கனவே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments