மும்பையில் திடீர் விபத்து! உயிருக்கு போராடும் மக்கள்(வீடியோ இணைப்பு) |
மும்பையில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.
|
மும்பையில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், பொலிசார் பொதுமக்களுடன் சேர்ந்து இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் மும்பை ரயில் நிலையம் அருகில் 42 குடும்பங்கள் வசிக்கும் 5 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது.
விபத்து நடந்த தினத்தன்று காலையில் இருந்தே குடியிருப்பில் அதிர்வு, மற்றும் விரிசல்கள் ஏற்பட்டு இருந்தது கண்டு அச்சம் அடைந்த குடியிருப்பாளர்கள் சுமார் 100 பேர் பாதுகாப்பாக வெளியில் வந்துள்ளனர்.
7 வது முறை அடுத்த சில நிமிடங்களிலேயே கட்டிடம் இடிந்து விழுந்ததால், மீதம் இருந்த 10 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர் அவர்கள் மீட்கப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
|
0 Comments